கொரோனா தடுபூசியை போட்டவர்கள் மாத்திரமே பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவை வழங்க முடியும் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் சேவை பெறுவதற்கு வருகைதருவோர் தடுப்பூசி அட்டையினையும், தேசிய அடையாள அட்டையினையும் தம்வசம் வைத்திருப்பது அவசியமாவதுடன், குறைந்தது ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுளைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறை இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.