மக்கள் திண்மக்கழிவுகளை உரிய முறையில் தரம் பிரித்து தந்தால் பசலை உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் என வலிகாமம் தென் மேற்கு, பிரதேசபையின் மீள் சுழற்சி நிலையத்தி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்
அந்தவகையில் அத்தொழிலாளிகள் மேலும் தெரிவிக்கையில் ;
இந்த பசளை உற்பத்தியினை மக்களின் ஒத்துழைப்புடன் தயாரித்து வருகிறோம். மக்களின் கழிவுகளையே இந்த தொழிற்சாலை தரம் பிரித்து பசளை தயாரிக்கிறது.
பெரும்பாலான மக்கள் கழிவுகளை 60 % வீதத்துக்கு மேல் தரம் பிரித்து தருகிறார்கள்.சிலர் சகல கழிவுப்பொருட்களையும் உரப்பையில் ஒன்றாக போட்டு தருகிறார்கள் .இதனை இங்கு ஒவ்வொரு பிரிவுகளாக பிரித்து பசளை செய்வதனால் சந்தைப்படுத்தல் தாமதமாகிறது
பிளாஸ்ட்டிக் ,கண்ணாடிப்பொருட்கள் ,இலைகுலைகள் ,கடதாசிப்பொருட்கள், பொலித்தீன்கள் என தரம் பிரிக்காமல் ஒன்றாக தருவதால் அதனை தரம் பிரித்து பசளை தயாரிப்பதற்கு சிரமமாக உள்ளது .எனவே மக்கள் அதனை உரிய முறையில் தரம் பிரித்து தந்தால் இலகுவாக இருக்கும் என்றனர்.
பிற செய்திகள்


