
2018-2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மின் உற்பத்தி இயந்திரங்களை கொள்முதல் செய்வதில் சாத்தியமான முறைகேடுகள் குறித்து பொது நிறுவனங்களுக்கான குழுவின் (கோப்) கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை அதிகாரிகளின் பங்களிப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கோப் குழுவின் விசாரணையில் முறைகேடுகள் குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
2018-2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 50 மின் உற்பத்தி இயந்திரங்கள் 3100 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்யும் போது அவை இயங்கும் நிலையில் இல்லை என மின்சார சபை அதிகாரிகள் மேலும் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், தேவையான பழுதுபார்ப்புகளுக்குப் பிறகு, தற்போது ஜெனரேட்டர்கள் இயங்கி வருவதாகவும், அவை செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த ஜெனரேட்டர்கள் எந்த அரசாங்கத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டன மற்றும் இயங்காத நிலையில் எதற்காக கொள்வனவு செய்யப்பட்டன என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோப் குழு தெரிவித்திருந்தது.
இரண்டு வாரங்களுக்குள் கணக்காய்வாளர் நாயகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோப் குழு இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
பிற செய்திகள்