ஜனாதிபதியை மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

எனது பேர்த்தியை முதன் முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் தான், எமது பேத்தியை முதன்முறையாக நேரில் பார்க்கும் பேருவகை தந்த பாக்கியத்தை நாம் பெற்றோம் என தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், எனது மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் என்ற ஸ்தானத்தை அடைந்தமைக்கு அவர்களை வாழ்த்தியதோடு, தாத்தா என்ற ஸ்தானத்தை எனக்குத் தந்தமைக்கு எனது நன்றிகளையும் கூறினேன் என ஜனாதிபதி தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply