வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 12 பேர் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையுடன், ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகின.
அதில், வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளில் தொற்றுப் பரவல் அடைந்துள்ள நிலையில், 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், வவுனியாவில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தார்.