
கோட்டா அரசின் உறுப்பினர்கள் இப்போது நகைச்சுவை நிகழ்ச்சியில் பேசுவது போன்று அறிக்கை விடுகிறார்கள் என சட்டத்தரணி மனோஜ் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெறுவதற்காக காத்து நின்றவேளை ,நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார் இப் போராட்டமானது போராட்டகாரர்களின் அமைதியான போராட்டம் அல்ல அவர்களின் மனதில் உள்ளது வஞ்சகம் மட்டுமே என்று.
ஆனால் இப் போராட்டம் இவ்வாறு மாறுவதற்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும். ஏப்ரல் 9ம் திகதி முதல் மே 9ம் திகதி வரை அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனர்.
அமைதியான முறையில் காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டத்தில் மே 9ம் திகதி ராஜபக்ஷ பதவி விலகுகிறார் என்று கூறும் போது, போதை பொருட்கள் வாங்கி கொடுத்து சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கூட்டனியர்களே.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ கூறியது காலிமுகத்திடலில் ஏற்பட்ட சம்பவம் அவருக்கு இரவுதான் தெரியுமாம். நாட்டில் பாராளுமன்றத்திற்கு முன்பு நடந்த சம்பவம் அவரிற்கு அன்று இரவுதான் தெரியும் என்ற கூற்று நகைச்சுவையாக உள்ளது.
நேரடியாக அனைவரும் பார்த்த விடயம் பெண்கள் மீது தாக்கினர். இளைஞர்கள் மீது சற்றும் பரிதாபமின்றி தாக்கினர் நேரலையாக பார்த்ததன் பின்னரே வேலையில் இருந்த அனைவரும் இப் போராட்டத்தில் தாக்கப்பட்டவர்கள் மீது கோபம் கொண்டனர்
வைத்தியசாலையில் இருந்த தாதியர் முதல் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கோபம் கொண்டனர்
இதற்கு யார் காரணம் மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரே காரணம். அவர்கள் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது தாக்குதல் நடத்த துண்டுதலாக இருந்தனர்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அன்று பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை மற்றவர்கள் மீது பழி சுமத்துகின்றனர்
எனவே இவ்வாறான பொய்யான தகவல்களைக் கூறி நாட்டில் இருக்க வேண்டாம்.
கருத்துக்களை பாராளுமன்றத்தில் கூறாமல் உண்மையான ஆண் என்றால் மக்களின் முன் நின்று கூறுங்கள்.
இன்றும் இவ் அரசாங்கத்திற்கு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை
கருத்துக்கள் ஒன்றுபட முடியவில்லை. எனவே நாட்டை வீணடித்துள்ளது போதும் கொள்ளை அடித்த மக்களின் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது.நான் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டு இத்தகவலை வழங்குகின்றேன்
நாங்கள் கடன் வாங்கி உண்ணவில்லை நீங்கள்தான் கடன் வாங்கி நாட்டை வீணடித்துள்ளனர்.
எனவே நாங்கள் கூறுவது போராட்டம் வரும் காலத்திலும் அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும்
எனவே இவ் அரசாங்கத்தின் முறையை மாற்றி வேண்டும் புதிய நாட்டை உருவாக்குவோம் என்றார்.