இந்திய நிறுவனத்துடனான உன்படிக்கையை புதுப்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கையை நீடிப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனம் பயன்படுத்தும் சுமார் 20 எண்ணெய் குதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்துடனான உன்படிக்கை 2024 ஆம் ஆண்டளவில் முடிவிற்கு வரவுள்ளது.

எனவே குறித்த ஒப்பந்தத்தை நீடிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தை தொடர வேண்டுமா அல்லது அதனை எப்படி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

Leave a Reply