வட மாகாண பிரதம செயலாளராக சிங்கள இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விசேட கலந்துரையாடல் தற்போது ஆரம்பமாகியது.
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தலைமையில் 3.30 மணியளவில் குறித்த கலந்துரையாடல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமானது.
குறித்த கலந்துரையாடலில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, நா.ம.உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், த.சித்தார்த்தன், வடமாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ளது.


