மோடியின் அழுத்தத்தால் இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை ஜனாதிபதி வழங்கியதாக குற்றச்சாட்டு – அதானி குழுமம் கவலை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதானி நிறுவனத்திற்கு இலங்கையின் இரு மின்னுற்பத்தி திட்டங்களை வழங்கியதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்து ஏமாற்றமளிப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதன் நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும் என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில், இலங்கையில் இரண்டு மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்ததாக மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ, கோப் எனப்படும் பொதுமுயற்சிகள் பற்றிய குழுவில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,எம்.எம்.சீ.பெர்டினண்டோ மன்னிப்பு கோரியிருந்ததுடன் தமது பதவி விலகல் கடிதத்தையும் எரிசக்தி அமைச்சரிடம் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *