
கொழும்பு,ஜுன் 14
நாட்டின் அரசியலில் தொடர்ந்தும் நிலைத்திருக்கக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த கட்சியின் உறுப்பினர்கள் மாற்று வழியை நோக்கி அவதானம் செலுத்த நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.