
பதுளை,ஜுன் 14
பதுளை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் நுகர்வோர் அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மறுஅறிவித்தல் வரை குறித்த வர்த்தக நிலையங்களில் அரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.