நாய் பார்க்கும் வேலையை கழுதை பார்க்க கூடாது! சபையில் பஞ்சடித்த எதிர்க்கட்சி

நாய் பார்க்கிற வேலையை கழுதை பார்க்க கூடாது என கூறுவார்கள், அதை தான் இந்த அரசாங்கம் தற்போது செய்து வருகிறது என எதிர்க்கட்சியினர் சபையில் இன்று கிண்டல் செய்துள்ளனர்.

முன்னர், மருத்துவ தேவை உள்ள காலத்தில் மருத்துவ சேவையினர் முன்னனால் நின்று செய்யற்படுவார்கள். பாதுகாப்பு படையினர் பக்க பலமாக செய்யற்படுவார்கள்.

ஆனால் நீங்கள் இன்று என்ன செய்துள்ளீர்கள், கொரோனா நிலைமையில் அனைத்து பொறுப்பையும் இராணுவத்தினரிடம் கொடுத்துள்ளீர்கள். அவர்களுக்கு பின்னால் மருத்துவ சேவையினர் நிற்கின்றனர். இதனால் இராணுவம், மருத்துவர்களை மக்கள் திட்டுகின்றனர்.

இதை தான் நாய் பார்க்கும் வேலையை கழுதை பார்க்க கூடாது என சொல்வார்கள். அப்படி மாறி பணிகளை செய்தால் இரண்டு விலங்கும் பேச்சு வாங்கும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply