
இந்த அரசு வெளியேறும் வரை நாடு உருப்படாது என அஜித தேரர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு வரும் போது நாங்கள் கூறினோம் எந்த மாற்றமும் வராது என்று. நாளுக்கு நாள் மக்களின் நிலை மிக மோசமாக காணப்படுகிறது.
நம் நாட்டில் நன்கு அறிந்த விடயம் பொருளாதார பிரச்சனை அதிகரித்து வருகிறது. வெளி நாடுகளில் உதவி பெறுவது மிக கடினம்
உண்மையில் மக்களால் இந்த கஷ்டத்தை தாங்க முடியாது. தயவு செய்து மக்களாகிய நீங்கள் இவ் அரசாங்கத்தை வெளியேற்றுங்கள் .அது உங்களால் மட்டுமே முடியும்.
மக்களால் ஆசையிற்கு கூட மீன் வாங்கி சமைக்க வாங்கி சமைத்த நாள் நினைவில் இல்லை.
உண்மையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் முடியாவிட்டால் தயவு செய்து நாட்டை விட்டு செல்லுங்கள்
ஆட்களை மாற்றினால் இங்கு எதுவும் மாற போவது இல்லை. மற்றும் மக்களிற்கு மருந்துகள் இல்லை.மக்களிடையே சண்டையிட்டு கொள்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள் இரண்டு வேளை சாப்பிட சொல்கிறார்கள்.நாளுக்கு நாள் விலை உயர்வு ஏற்படடுகிறது .ஆனால் எங்கு சம்பளத்தை உயர்த்துகின்றனரா இல்லை. விலை உயர்ந்தாலும் பொருட்கள் இல்லை.
எனவே மக்களிற்கு வாய்ப்பை வழங்குங்கள்.இந்த அரசாங்கம் வேண்டாம் தயவுசெய்து வெளியே செல்லுங்கள் என்றார்.