நாட்டில் தற்போது மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக பாதகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக தப்பிசெல்ல முயன்ற 250 பேர் கடற்படையினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அதன் சாதக தன்மையை பயன்படுத்தி மனித கடத்தில்காரர்கள் பொருமளவான பணத்தினைபெற்று மோசடியில் ஈடுபடுவதாக பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை நாட்டில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துவரும் நிலையில் சில வாரங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்