மட்டக்களப்பிற்கு எதிர்வரும் நாட்களில் 1 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளதோடு மாவட்டத்தில் இன்று வரை 142 732 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளிலும் பாடசாலைகள் பொது இடங்களிலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன. 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி பெறுவது அவசியம்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டு மாவட்டத்தில் 68 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதோடு மாவட்டத்தில் மொத்தமாக 8275 பேர் தொற்றுக்குள்ளாகி 116 பேர் மரணமடைந்து 757 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருதோடு 6417பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement
இறந்த 116 பேரில் 69 சதவீதமானோர் 60 வயதை தாண்டியவர்கள் ஆவர். மேலும் கொரோனா 3ம் அலை காரணமாக 7292 பேர் தொற்றுக்குள்ளாகி 107 பேர் மரணமடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் மட்டு மாவட்டத்தில் 32221 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டதில் 30 வயதை தாண்டிய 3 இலட்சத்து 11 ஆயிரம் பேரில் 46 சதவீதமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
மாவட்டத்திலுள்ள 12 ஆயிரம் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் 1வது தடுப்பூசி பெற்றுள்ளதுடன் 2வது தடுப்பூசி 1 மாதத்தின் பின் வழங்கப்படும். வெளிநாடு செல்வோர் தமக்கான தடுப்பூசிகளை நிகழ்நிலையில் விண்ணப்பித்து பெற முடியும் என பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


