இலங்கைக்கு உதவுவதற்கு பல்வேறு நாடுகள் தயாராக உள்ளதாக தான் நம்புவதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீட் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய சர்வதேச நாடுகளின் உதவிகள் இலங்கைக்குக் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கைக்கு உதவ எந்தவொரு நாடும் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த போதே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீட் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ள கருத்து உண்மைத் தன்மையற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்