
2019 ஆம் ஆண்டில் இருந்த பொருட்களின் விலைகளை மீண்டும் அதே மட்டத்திற்கு கொண்டு வர முடியாது எனவும், படிப்படியாக வருமானத்தை அதிகரிப்பதே செய்ய கூடிய ஒரே வழிமுறை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இளைஞர்கள் எதிர்பார்ப்பை கொள்ளக் கூடிய நாட்டை கட்டியெழுப்ப நான் ஏற்றுக்கொண்ட சவாலை நிறைவேற்றுவேன்.
இந்த வருடத்தில் முடியாவிட்டாலும் 2024 ஆம் ஆண்டு முதல் எதிர்பார்ப்புகளுடன் முன்நோக்கி செல்லவதை ஆரம்பிக்க முடியும்.
நாம் சரியான வழியில் செல்ல வேண்டுமாயின் இந்த வருடம் கஷ்டமானதாக இருக்கும். 2023 ஆம் ஆண்டு, இந்த ஆண்டை விட சிறிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு எமது வலுவான பொருளாதார பயணத்தை ஆரம்பிக்க முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
பிற செய்திகள்