முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்து

முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு 12 ஆம் கட்டை பகுதியில். இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நேருக்கு நேர் மோதியதில், விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது படுகாயமடைந்த நபர், 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம், தர்மபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *