பணவீக்கம் அதிகரித்தால் பாணின் விலை ரூ.1500 ஆக உயரும்: சுனில் ஜயந்த

கொழும்பு, ஜுன் 14

பணவீக்கம் இவ்வாறு தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

இன்று 100 ரூபாவில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்வது டிசம்பர் மாதத்தில் 1790 ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார். உயர் பணவீக்கம் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும் அதனை வளர்ச்சியடையாமல் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *