
பூநகரி, ஜுன் 14
குமிழமுனை, நொச்சிமுனை பிரதேசத்தில், கணவாய், இறால், பாலைமீன், கடலட்டை போன்றவற்றை பண்ணை வளர்ப்பு முறையில் வளர்ப்பதற்கு பொருத்தமான சுமார் 300 ஏக்கர் அரசாங்க காணி பூநகரி, குமிழமுனை, நொச்சிமுனை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் துறைசார் அதிகாரிகள் சகிதம் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் முடியுமானளவு பண்ணைகளை உருவாக்கி, பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுவூட்டுவது தொடர்பாக கலந்துரையாடினா