
கண்டி, ஜுன் 14
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
போட்டி இடைநிறுத்தப்படும் போது 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.
ஸ்டீவ் ஸ்மித் 21 ஓட்டங்களுடனும் மார்னஸ் லாபுசாக்னே ஓட்டங்கள் ஏதும் பெறாமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.