
தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பதற்கான தடைக்கால உத்தரவு இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.
மீன்களின் உற்பத்தி காலமான கடந்த இரண்டு மாதங்கள் காணப்பட்டமையால் வருடம் தோறும் ஏப்ரல் ஜூன் ஆகிய மாதங்கள் தமிழக அரசினால் மீன் பிடிப்பதற்கான தடை காலமாக பிரகடனப்படுத்தப்படுகின்றமை வழமையாகும்.
இதன்பிரகாரம் நாளைய தினத்தில் இருந்து (ஜூன் 15) தமிழகம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் நாளைய தினம் தடை உத்தரவு நீக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினமே இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 400 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் சுமார் நான்காயிரம் பேர் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.
எனவே தடை உத்தரவு நீக்கப்படாத இன்றைய நாளிலே தமிழக மீனவர்களின் பாரம்பரிய முறையிலான வாழை இலை தோரணங்கள் கட்டி, இறை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளனர். தடை உத்தரவு நீக்கப்படாமல் இவ்வாறு சென்றுள்ளமையால் இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கும் ஏனைய சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன என தமிழக அரசு கவலை தெரிவித்துள்ளது.