ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்ட மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு!

ஹிசாலினியின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிசாலினி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மேலும் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதுடன் சிறுயின் பிரேத பரிசோதனையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் இதனையடுத்து மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டங்க ள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

எனினும் இந்நிலையில் டயகம மேற்கு மூன்றாம் பிரிவு தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் உடல் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளதை அடுத்து சிறுமின் உடல் புதைக்கப்பட்டுள்ள மயானத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *