நாட்டை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் அனைவருமே இனவதாம், மதவாதம் கொண்டு அரசியல் செய்து வருவது எமது நாட்டின் சாபகேடு ஆகும் என செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் தெரிவித்தார்.
செங்கலடி கோட்டா “கோ”கம பகுதியில் தன்சலவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
கி.மு காலப்பகுதியில் இலங்கைக்கு பௌத்த துறவி மிஹிந்த தேரர்ரால் இந்தியாவில் இருந்து வெள்ளரசுகிளையுடன் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வந்தாக கூறப்படும் இந்நாளினை அனைத்து பௌத்தவர்களினாலும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
ஆனால் அன்று தொட்டு இன்றுவரை இலங்கை நாட்டை ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் அனைவருமே இனவதாம், மதவாதம் கொண்டு அரசியல் செய்து வருவது எமது நாட்டின் சாபகேடு ஆகும்.
தர்மத்தையும், அமைதியையும் போதிக்கும் பௌத்த மதம் இன்று பலவீனம் கண்டுள்ளது. முறையற்ற ஆட்சி, இனவாதம், மதவாதம், மனிதனை மனிதன் கொள்ளும் ஆட்சிமுறைமை, தொடர்ந்து வரும் மக்கள் போராட்டம், கண்ணீர் பிரயோகம் கொண்ட அடக்குமுறை, இவ்வாறான ஆட்சியாளர்களால் பௌத்தம் மத பொதிக்கின்ற நல்லோழுக்கம் பலவீனம் மடைந்து காணப்படுகின்றது.
இன்றைய நாளில் மக்களோ நடுதெருவில் ஆட்சியாளனே அரச சிம்மாசனத்தில் இருந்து வருகின்றனர் ஆனால் மக்களை பிடித்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக யாரும்மில்லை.
தங்களுடைய பதவியை நிலையாக நிலைத்து வைக்கவும் அண்ணன் தம்பியை பதவியில் வைக்கவுமே ஆட்சி செய்கிறார்கள்.
ஜனாதிபதி ஐயா உங்கள் காதுகள் கேட்கவில்லையா! இந்த நாட்டு மக்களின் பட்டினி ஓலம், ஜனாதிபதி ஐயா!உங்களது கண்கள் பார்வை இழந்துள்ளதா! இந்த நாட்டின் மக்களின் பட்டினிச்சாவு தினம் தினம் வரிசையில் இருந்து அவதியுற்று பொருட்கள் வேண்டும் அவலம். நாளுக்கொரு விலையுர்வு, நாளுக்கொரு கொலை என தொடரும் வண்ணமாகவே இந்த நாடு மாறுகின்றது.
இந்த நிலையை மாற்றம் செய்ய உடனடியாக நீங்கள் பதவி விலகி நாட்டை மிளிரச்செய்யுங்கள், எமது நாட்டு மக்களை வாழ வழி விடுங்கள் என்றார்.






பிற செய்திகள்