
இலங்கையில் தற்போது பாரிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பல மாணவர்கள் ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் மூலம் கல்வி பாதிக்கப்படுகிறது. அதே போல இலங்கையில் மாணவர்களிற்கு போசணை குறைவாக உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந் நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையிற்கு தீர்வின்றி இருக்கின்றனர்.
நாட்டு மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அவற்றுள் பாடசாலை மாணவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
யாரும் கடனிற்கு எரிபொருள் தரமாட்டார்கள், இது தான் கடைசியாக பெறும் எரிபொருள் என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
பல மாணவர்கள் ஆசிரியர்கள் சென்று வர முடியாத நிலை உள்ளது. இதன் மூலம் கல்வி பாதிக்கப்படுகிறது.
அதே போல இலங்கையில் மாணவர்களிற்கு போசனை குறைவாக உள்ளது. 5 வயது பிள்ளைகள் மந்த புத்தியில் காணப்படுகின்றனர்.
அன்று திரிபோச கிடைக்கும், ஆனால் தற்போது அவை வழங்குவதில்லை, எவ்வாறு பிள்ளைகளிற்கு போசனை கிடைக்கும். இதற்கு என்ன தீர்வு? இவ் அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்.
கொவிட் காலங்களில் கல்வி பாதிக்கப்பட்டிருந்தது, ஆனால் இன்று இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நாட்டில் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
எனவே தயவுசெய்து இந் நாட்டை வீணடிக்காமல் நாட்டை விட்டு செல்லுங்கள். – என்றார்.
பிற செய்திகள்