
சிங்களவர்கள் மூலம் நாட்டின் பிரதமராக வந்த கொள்ளைகாரன் மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாட்டை வீணடித்துள்ளார் என ராஜாங்கன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நம் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றது.
பிக்குகளிற்கோ, பள்ளிவாசலில் மௌவிக்கோ, யாருக்கு பிரச்சனை நடந்தாலும் அவர்களுக்காக நான் குரல் கொடுப்பேன். எனக்ககு இனம், பேதமில்லை.
ஆனால் சிலர் ராஜபக்ஷ குடும்பத்தினரிற்கு ஜால்ரா போட்டு கொண்டு இருக்கின்றனர்.
சிங்களவர்கள் மூலம் நாட்டின் பிரதமராக வந்த கொள்ளைகாரன் மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாட்டை வீணடித்துள்ளார்.
பேசும் ஞானசார தேசரரை இன்று காணவில்லை, எங்கு ஒழிந்தார் என்று தெரியவில்லை.
மரண பயம் காட்டுகின்றனர், நாட்டில் வீதியில் இறங்கி பிக்குகள் நடக்க முடியாமல் உள்ளது.
ஞானசார தேரர் ஒழிந்து கொண்டாரா? எங்கு சென்றார் என்ற தகவலே இல்லை.
அதேபோல ஞானசார தேரர், மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் பாத்திரம் கழுவும் பஞ்சாரத்த தேரர் பல அசாதாரண செயல்களை மேற்கொள்கின்றனர்.
இவ் செயல்கள் குறித்து நாங்கள் முறைப்பாடுகள் அளித்துள்ளோம். நாட்டை வீணடிக்க வேண்டாம்.- எனத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்