உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் இலங்கையில் கண்டுபிடிப்பு..!

உலகின் மிகப்பெரிய “star sapphire cluster” எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடொன்றில் கிணறு ஒன்று தோன்றும் போது குறித்த மாணிக்க கல் பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இளம் நீல நிறமான குறித்த பாறை படிகம் மற்றும் குருந்தம் இணைந்து உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 510 கிலோ எடையுடைய குறித்த கல் சர்வதேச சந்தையில் 100 டொலர் மில்லியன் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *