
கொழும்பு, ஜுன் 15
எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வாரம் முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்றிரவு வெளியிடப்படவுள்ளது.
அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.