நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்Nவுறு துறைசார் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் எண்ணெய் ஏற்றிய கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலானது கடந்த ஏப்ரல் மாதம் (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலை எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் 50 ஆவது நாளைக் கடந்துள்ளது.
இந்நிலையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக 40,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் கொண்ட ஏற்றுமதி இன்னும் விடுவிக்கப்படவில்லை.
ஆதாரங்களின்படி, கப்பலுக்கு சுங்கவரித் திணைகளத்தால் அறவிடப்படும் தொகையாக $18,000 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்