
இலங்கை வங்கி (BOC) உள்ளூர் நிதித்துறையில் கட்டியெழுப்பப்பட்ட ஸ்திரத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் Brand Finance Lanka, Brand Finance Lanka மூலம் வருடாந்த மதிப்பீட்டில் முதல்தர வங்கி வர்த்தக நாமமாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்தாண்டில் 53.919 பில்லியன் ரூபா வர்த்தக நாமத்தைப் பதிவு செய்த இலங்கை வங்கி வர்த்தக நாமம், தற்போது இலங்கையில் 50 பில்லியனைத் தாண்டிய ஒரேயொரு வங்கி வர்த்தக நாமமாக உள்ளது .
நாட்டு மக்களின் அபிலாஷைகளை தெளிவாக புரிந்துகொள்வதுடன், நிதி பாதுகாப்பை உறுதிசெய்து, புத்தாக்கமான நிதிச் சேவைகளில் இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இலங்கை வங்கி இன்றுவரை தனது இருப்பையும் நிலைப்பாட்டையும் நிலைநாட்ட முடிந்துள்ளது.
இலங்கை வங்கியின் சமூக-பொருளாதாரத் திட்டத்தின் அமைப்பு பற்றிய நுண்ணறிவு இலங்கையின் நிதித்துறைக்கு பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு உதவியுள்ளது.
குறித்த சாதனை தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த,
“இலங்கையின் பாரம்பரியம் மற்றும் அபிலாஷைகளுக்கு அமைவாக, இந்நாட்டு மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஒரு உள்ளூர் வர்த்தக நாமமாக இலங்கை வங்கிக்காக மக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.
” மக்களின் உண்மையான தேவைகளை உணர்ந்து சேவை செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் காரணமாக இலங்கை வங்கி பல தசாப்தங்களாக இலங்கையின் முன்னணி வங்கி வர்த்தக நாமமாக இருக்க முடிந்துள்ளது என்பதையும் நான் கூற விரும்புகின்றேன்.
இந்த நெருக்கடியான காலத்திலும், நாட்டின் நம்பகமான நிதிப் பங்காளி என்ற வகையில், நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இலங்கை வங்கியை இந்த நிலைக்கு உயர்த்துவதற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்தர்ப்பத்தில் நான் விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.