ரிஷாத் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீ பரவலுக்கு இலக்காகி உயிரிழந்த டயகம சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து சிரேஷ்ட சட்ட வைத்திய நிபுணர்கள் குழு முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதேவேளை விசாரணைகளின் பிரகாரம் தீ பரவல் சம்பவம் கடந்த 3ஆம் திகதி காலை 6.45 மணியளவில் பதிவாகியுள்ள போதும் ஹிஷாலினி காலை 8.20 மணியளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அனுமதி அட்டை தகவல்கள் கூறுகின்றன.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் அமைச்சரின் மாமா, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவருடைய பெயர் ஹிஷானி என்றும் வயது 18 என்றும் கூறியுள்ளதாகவும் மேலதிக நீதவான் தெரிவித்துள்ளார்.
Advertisement
அத்துடன், சிறுமி உயிரிழந்த பின்னர் ரிசாத் வீட்டிலிருந்த பொலிஸ் உடைக்கு சமனான உடையணிந்த நபரொருவர், சிறுமியின் சகோதரருக்கு அழைப்பு விடுத்து இந்த விடயத்தை இழுத்தடிப்பு செய்ய வேண்டியதில்லை, பொலிஸிற்கு செல்ல வேண்டியதில்லை என அச்சுறுத்தி, ஆரம்பத்தில் 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மரண சடங்குகளுக்காக 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.


