
வாழைச்சேனை, ஜுன் 15
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா உம்மா என்பவரே மின்சாரம் தாக்கி இன்று புதன்கிழமை காலை மரணமடைந்துள்ளார்.
அதிகாலை 6 மணியளவில் வீட்டு வேலைகளை செய்வதற்காக வெளியில் வந்து வீட்டிற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் கம்பியில் கை வைத்த சமயத்தில் மின்சார ஒழுங்கு காரணமாக மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கிய பெண்ணை குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.