
யாழ், ஜுன் 15
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு ஒன்றில் வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நிலமாபிள்கள் , கழிவறைக்கு பயன்படுத்தும் மாபிள் உபகரணங்கள் , மின் மோட்டார் மற்றும் மின் வயர்கள் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் இலட்சம் ரூபா பொருட்கள் திருடப்பட்டுப் போயுள்ளது.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் துரிதமாக செயற்பட்ட கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் குறித்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்