
கொழும்பில் உள்ள உணவகங்களிலிருந்து தினசரி உணவுக் கழிவுகளை மேல் மாகாணத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மாதாந்தம் சுமார் 30 மில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும் என கொழும்பில் உள்ள உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற கழிவு உணவுகள் கிலோ ரூ.15-25இற்கு விற்கப்படுவதாகவும், முறையாக அகற்றுவதற்கு இடமில்லாததால் பன்றி பண்ணைகளுக்கு வழங்கப்படுவதாகவும் சில உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ சமைத்த உணவுகள் வீசப்படுகிறன. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 701 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவகங்களும், 156 சுற்றுலாப் பயணிகளின் அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்களும் உள்ளன.
மேலும், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட ஏறக்குறைய 3,000 பதிவு செய்யப்படாத உணவகங்கள் உள்ளன. அதன்படி, கொழும்பு மாநகரில் உள்ள அனைத்து உணவகங்களிலும் நாளாந்தம் தூக்கி எறியப்படும் உணவின் அளவு சுமார் 60,000 கிலோகிராம் ஆகும்.
கொழும்பு நகரில் சுமார் 110,000 தனி வீடுகளும் 18,000 அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இவற்றில் இருந்து நாளாந்தம் சுமார் 700 மெட்ரிக் தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதில், 300 மெட்ரிக் தொன் சமைத்த உணவுக் கழிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்