
இலங்கை நாணயமான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியுற்றுக் கொண்டிக்கின்றது என மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி தொடக்கம் ஜூன் இரண்டாம் வாரம் வரையான காலப்பகுதிக்குள் ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
இருப்பினும் மே மாத நடுப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக தற்போது ரூபாவின் பெறுமதியில் ஒரு நிலையான மாற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வங்கி கூறிப்பிடுள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக அமெரிக்க டொலர் மட்டுமன்றி யூரோஇ ஆஸ்திரேலிய டொலர், ஜப்பானிய யென் , இந்திய ரூபா என்பவற்றின் ரூபாவுக்கு எதிரான பெறுமதியும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிற செய்திகள்