ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் நட்டத்திலும் முகாமையாளருக்கு மில்லியன் கணக்கில் சம்பளம்! கோப் குழு அறிக்கை

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் கடந்த வருடத்துக்கான தேறிய நட்டம் 45,674 மில்லியன் ரூபா என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இத்தகைய நட்டத்தை எதிர்நோக்கிய தருவாயிலும் கூட, உயர் முகாமைத்துவ அதிகாரி ஒருவருக்காக மாதாந்தம் 3.1 மில்லியன் ரூபாவை வேதனமாக செலுத்தியுள்ளனர்.

இந்தக் கொடுப்பனவுகளுக்கான நிதி, அமைச்சரவை பத்திரம் மற்றும் பொது நிதி ஊடாக வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கோப் குழு அவதானம் செலுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் திறைசேரி ஊடாக மேலதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள அதேவேளை, குறித்த நிறுவனம் அதனை முறையாக பயன்படுத்தியிருந்தால் இத்தகைய நிலைமை உருவாகியிருக்காது என கோப் குழு கருத்து வெளியிட்டுள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் தேசிய விமான நிறுவனமொன்றை, நடைமுறைக்கு மாறான திட்டங்கள் ஊடாக தொடர்ந்தும் பொதுமக்களின் வரிப்பணத்தில் கொண்டு நடத்த வேண்டுமா என்பது குறித்து தீவிர அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று கோப் குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *