யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்தது கொரோனா மரணம்

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த, 75 வயதுடைய ஆண் ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

மேலும் இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 120 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் நேற்று (26) கொரோனா தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *