நாட்டின் நிலைமை தொடர்பாக பிரதமரிடம் எந்த திட்டமும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகிறது.
பிரதமரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியேற்று ஊழல்வாதிகளை தண்டிக்க விருப்பம் இல்லையா என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “நான் பொலிஸ் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். அதுதான் பிரச்சினை.
ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை.
செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன். அந்த திட்டத்திற்கு ஜனாதிபதி உடன்படவில்லை.
இதனையடுத்து, ரணிலுக்கு பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் எதுவுமே செய்யாமல் இருக்கிறார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்