லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருள் பதுக்கல்! மக்கள் விசனம்

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை பெட்ரோல் கையிருப்பில் காணப்பட்ட போதும் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நீண்ட நாட்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

பெட்ரோல் இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் இருப்பதாக மக்கள் சென்றுள்ளனர். எனினும் பெட்ரோல் வழங்கப்படவில்லை.

எதற்காக பெற்றோலை வைத்துக் கொண்டு வழங்குகின்றீர்கள் இல்லை? என மக்கள் கேட்டபோது, பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோலை விநியோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அங்கு கடமையாற்றிய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். மக்கள் விசனம் தெரிவித்த நிலையில் அங்கிருந்து சென்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *