ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலையில் சுகவீனங்கள் எதுவுமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சம்பந்தப்பட்ட சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பற்றி தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டில் உள்ள மிகப் பெரிய அரசியல் கட்சி. அப்படியான கட்சியை கைவிட்டு, வேறு கட்சியில் இணைந்து கொள்ளும் அளவுக்கும் தலையில் சுகவீனங்கள் எதுவும் எவருக்குமில்லை.
பெரிய கட்சியை கைவிட்டு, அதிகாரமில்லாத கட்சியில் எவரும் இணைய மாட்டார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகள் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில சிறிய தமிழ் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொண்டதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.
பிற செய்திகள்