இருக்கு ஆனால் இல்லை: ஏமாற்றத்தில் மக்கள் (படங்கள் இணைப்பு)

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இருப்பில் இருந்தும் மின்சாரம் தடைபட்டமையால் மூன்று மணித்தியாலயங்கள் தாமதத்தின் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்டது.

வவுனியாவில் இன்று (15) காலை அனேக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது.இதனால் பெற்றோலை பெற்று கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் கூடிநின்றனர்.

எனினும் காலை8.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டமையால் எரிபொருள் நிரப்பும் செயற்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வரிசையில் நின்ற பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்தனர். 
எனினும் காலை 11 மணியளவில் மின்சாரம் வந்ததும் மீண்டும் எரிபொருள் நிரப்பும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *