அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வது உறுதியானது !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின் விவரங்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா செல்லும் அவர் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் அவர் சந்திப்புக்களை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த பயணம் ஜூலை 13 மற்றும் 16 க்கு இடையில் நடைபெறும் என பைடன் அரசாங்கம் முன்னர் அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கும் விஜயம் செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சவூதியின் சவுதி இளவரசர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள நாட்டின் துணைத் தூதரகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டார்.

இந்த சம்புபவத்தின் பின்னனியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *