
கொழும்பு, ஜுன் 15
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தூதுவருடனான சந்திப்பினை மேற்கொள்வதற்கான திகதியினை முன்பதிவு செய்து 10 கட்சியின் உறுப்பினர்களுடன் தூதுவரை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்கள் 10 பேருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.