
தலவாக்கலை வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை வீதியில் தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நுவரெலிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்