விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கெதிரான எதிரான தடை நீக்கம்!

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

எவ்வாறெனினும் இவ்வாறு தடை நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை. புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 புலிச் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக மேலும் 53 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது

கடந்த அரசாங்கமும் 216 புலி ஆதரவு அமைப்புக்களுக்கு எதிரான தடையை நீக்கியிருந்தது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *