
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினை காரணமாக தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் மண்ணென்னய் இன்மையால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.
மீன்பிடி நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மண்ணென்னெய் விநியோகிக்கப்படுவதால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
அதே நேரம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாகவும் சந்தையில் மீன் விலை அதிகரித்துள்ளது இதனால் மீனவர்கள் உட்பட மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் மீன் வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் அண்மை நாட்களாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடாமையினால் மீன் சந்தையில் மீன்களின் வருகையும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக மீன் விலையும் அதிகரித்துள்ளது மீன் விலை அதிகரித்துள்ளமையினால் மீன்களை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன்வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி இன்மை மற்றும் மீன் வியாபாரம் தொடர்சியாக குறைந்துள்ளமையினால் மீன் சந்தைகளை குத்தைகை ரீதியாக பெற்று நடாத்தும் குத்தகை தாரர்களும் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர்.
எனவே விரைவில் மீனவர்களுக்கான மண்ணென்னயை போதிய அளவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு தருமாறு மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்