
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கந்தப்பளையில் பல கோடி ரூபாய் பெறுமதியான காணி ஒன்றில் இடம்பெற்ற மோசடி குறித்தும் அதில் வேலு யோகராஜ் தொடர்பு பட்டுள்ள விடயம் தொடர்பாகவும் விபரங்கள் வெளியாக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக அவரிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை குழு விசாரணை நடத்தி, அவரை பதவி நீக்கி இருப்பதாக முன்னதாக தகவல் வெளியாகின.
இது தொடர்பாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும், பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவருக்கு எதிரான விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், 7 நாட்களுக்குள் அவர் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்