மாளிகையில் இருக்கும் அரசனுக்கு ஏழை மக்களின் துன்பம் புரியப்போவதில்லை – குணபாலசிங்கம் ஆதங்கம் !

ஏழை மக்களுடன் அரசன் பழகினால் தான் அவர்கள் படும் பசி , துன்பங்களை விளங்கிக்கொள்ள முடியும் மாளிகையில் இருந்தால் ஒன்றும் புரியாது .என வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் சமூகம் ஊடகத்துக்கு ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்படட நிலங்கள் இதுவரைக்கும் விடுக்கப்படாமையால் யாழ்.வலி வடக்கு பிரதேச மக்கள் இன்றைய தினம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என பூசை வழிப்பாட்டுடன் பிரார்த்தனை இடம்பெற்றிருந்த போதே இதனை தெரிவித்திருந்தார.

அந்தவகையில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;

அரச சேவையில் மக்கள் நாட்டம் கொண்ட படியால் விவசாயம்,மீன்பிடி போன்ற துறையில் ஈடுபடாத தன்மை காணப்படுகின்றது .இதனால் எதிர்வரும் காலங்களில் மீன்பிடி,விவசாயம் போன்றன முற்றாக அழிந்து விடக்கூடிய நிலை ஏற்படலாம் .எனினும் அரசாங்கத்தின் அதிவேக கவனம் காணப்பகின்ற போது நாடு பொருளாதார நிலையில் இருந்து மீள முடியும்.

எரிவாயு ,பெற்றோல்,டீசல் என ஒன்றும் இல்லை ;கடன் வாங்கி வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பி வந்தேன் .இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியினை குறைந்தது 5 வருடங்கள் ஆயினும் கஷடப்பட வேண்டிய நிலையில் உள்ளோம் .

ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்ற தன்மையின் காரணமாக தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்தில் இஸ்திரமான நிலையை அடைய முடியாது புதிதாக பதவிக்கு வரும் அரசாங்கத்தினாலும் கடனை கட்ட வேண்டிய பொறுப்புக்கு உள்ளாகும் .

அழிந்துகொண்டு செல்லும் அரசாங்கத்தினை யாராலும் பொறுப்பெடுத்து செய்ய இயலாது . அப்படி வந்தாலும் 5 வருடங்கள் இதிலிருந்து மீள காலம் எடுக்கும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் காலத்தில் அதிகளவான நெல்லானது உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் இன்றைய அரசாங்கத்தில் நெல்லின் உற்பத்தியானது கிடைக்காமலே போய்விட்டது .

ஏழை மக்களுடன் அரசன் பழகினால் தான் அவர்கள் படும் பசி , துன்பங்களை விளங்கிக்கொள்ள முடியும் மாளிகையில் இருந்தால் ஒன்றும் புரியாது .மக்களின் துன்பங்கள் எங்களுக்கு தெரியும் ஆனால் பெரிய அரசியல்வாதிக்கு தெரியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *