
கொழும்பு,ஜுன் 15
பசில் ராஜபக்க்ஷவின் ராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 99 அ உறுப்புரை பிரகாரம், அவரது நியமனம் சட்டவிரோதமானது என குறிப்பிட்டே அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அரசியலமைப்பின் 99 அ உறுப்புரை பிரகாரம், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட வேட்பு மனுக்கள் அல்லது தேசியப் பட்டியலில் ஒருவரது பெயர் சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே, அத்தகைய வெற்றிடத்தை நிரப்ப ஒரு நபர் பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவர் என மனுதாரர் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.