கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,401 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு , தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் அனைவரையும் கைது செய்யும் பணி தொடரும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


